உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருப்புட்குழி கோவிலில் தெப்போற்சவம் விமரிசை

திருப்புட்குழி கோவிலில் தெப்போற்சவம் விமரிசை

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில், மூன்று நாள் தெப்போற்சவவிழா, பிப்.,9ம் தேதி வெகுவிமரிசையாக துவக்கியது. நேற்று முன்தினம்நிறைவு தின தெப்போற்சவம் நடந்தது.மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் தெப்பலில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை