உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் பலி

மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபி, 49. இவரது மகன் மஸ்தான், 28. இவர், அதே பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 'ஆர்15' இருசக்கர வாகனத்தில், ஊத்துக்கோட்டை சென்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் சாலையில், செங்காடு அருகே வேகமாக வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.இதில், பலத்த காயமடைந்த மஸ்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை