| ADDED : பிப் 04, 2024 06:06 AM
வாலாஜாபாத், : வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர்.அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில், பயணியர் அமர்வதற்கென இருக்கை வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை வளாகத்தில் திண்ணை போன்ற இடத்தில் அமர்கின்றனர்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பயணியருக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வருகின்றனர்.