மேலும் செய்திகள்
டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது
16 hour(s) ago
நாகர்கோவில்:சுட்டெரிக்கும் வெயில், நாட்டின் வட மாநிலங்களில் லோக்சபா தேர்தல் காரணமாக, சுற்றுலா மையமான கன்னியாகுமரி பயணியர் இன்றி வெறிச்சோடியது. தமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை துவங்கியுள்ளது. அருவிகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பயணியர் சுற்றுலா வருவதை தவிர்த்து வருகின்றனர்.குறைவான எண்ணிக்கையில் வரும் சுற்றுலா பயணியரும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மாலையில் வெளியே வருவதால் அந்த நேரத்தில் மட்டும் லேசான கூட்டம் காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் இறுதியில் விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல நீண்ட கியூ காணப்படும். தற்போது அந்த நிலை இல்லை.இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.அதுபோல மீன்பிடி தடைக்காலம் என்பதால், கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகமும் வெறிச்சோடி காணப்படுகிறது.
16 hour(s) ago