| ADDED : டிச 30, 2025 05:21 AM
கரூர்; கரூர் மாவட்ட, 'போட்டோ-ஜியோ' சார்பில், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க., அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில், ஐந்து சதவீதத்துக்கு மேல் பணி நியமனம் இல்லை என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், போட்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திரசேகர், மணிகண்டன், ராதாகிருஷ்ணன், சிங்கராயர், ராஜகணபதி, மலைக்கொழுந்தன், அன்பழகன், பால்ராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.