| ADDED : ஜூலை 26, 2024 02:21 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபு-ரத்தை சேர்ந்தவர் சங்கர், 39. விவசாய கூலி தொழிலாளி, இவர் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை நேற்று மதியம், 1:00 மணியளவில் தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்பு, வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர்.அப்போது, அதே ஊரை சேர்ந்த வேம்படி மகன் காந்தி என்ப-வரும், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பஜாஜ் டிஸ்-கவர் பைக்கையும் காணவில்லை. இருவரும் சேர்ந்து, காணாமல் போன பைக்குகளை, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டு மகாதானபுரம் பிரிவு ரோடு, காவிரி ஆற்று படுகையில் சென்று பார்த்தபோது, காணாமல் போன இரண்டு பைக்குகளும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.இதன் அருகில் இரண்டு வாலிபர்கள் நின்றிருந்தனர். பாதிக்கப்-பட்ட இருவரும் அங்கு சென்ற போது, இவர்களை திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த, வெள்ளாளப்பட்டி கிரா-மத்தை சேர்ந்த, 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த பிரதீப், 24, என்பவர் ஓடியது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து, சிறுவனை பிடித்து லாலா-பேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுவன் மற்றும் பிரதீப் ஆகிய இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.