உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்

கரூர்: கரூர் அருகே, நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளில் பொது-மக்கள் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கரூர் - கோவை சாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சா-யத்து பகுதியில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அக்ரஹாரம் பிரிவில் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில், பொதுமக்கள் காத்தி-ருந்து கரூர் நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நி-லையில், பயணியர் நிழற்கூடம் தற்போது, சேதமடைந்துள்ளது. மேலும், நிழற்கூடத்துக்கு அருகில் போடப்பட்ட சிமென்ட் இருக்கைகள், உடைந்த நிலையில் உள்ளன. இதனால், நீண்ட நேரமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், உடைந் பெஞ்-சுகளில் அமரும் அவல நிலை உள்ளது.எனவே, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம், பயணியர் நிழற்கூடம் அருகே, உடைந்த நிலையில் உள்ள சிமென்ட் இருக்கைகளை அகற்றி, விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை