கரூர்: ''முன்னாள் அமைச்சரையும், உன்னையும் சும்மா விடமாட்டோம் என, மர்ம நபர்கள் மிரட்டினர்,'' என, தாக்குதலுக்கு உள்ளான பிரவீன் தெரிவித்தார்.கரூர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரவீன், 23, கூறியதாவது:கரூர் அருகே, வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த என்னுடை சித்தப்பா பிரகாஷ் என்பவரின் ஆலோசனைபடியே, அவரது மகள் ேஷாபனா பெயரில் இருந்த, 22 ஏக்கர் நிலம் விற்-பனை செய்யப்பட்டது. அதற்குரிய பணமும் சட்டப்படி செலுத்-தப்பட்டது. ஆனால், பிரகாஷ் கொடுத்த புகாரின் படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், என் மீதும் வழக்கு போட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தற்போது நிபந்தனை ஜாமினில், கரூரில் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கையெழுத்து போட்டு வருகிறேன்.நேற்று காலை கையெழுத்து போட்டு விட்டு, ரெட்டிபாளை-யத்தில் டீ குடிக்க சென்ற போது காரில் வந்த கும்பல் என்னை சர-மாரியாக தாக்கியது. அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்-கரையும், உன்னையும் சும்மா விடமாட்டோம் என மிரட்டினர். பொதுமக்கள் கூடியதால், அவர்கள் தப்பினர். அவர்களை எனக்கு அடையாளம் தெரியும்.அவர்களின் ஒருவர் தவற விட்ட, மொபைல் போனை போலீ-சிடம் ஒப்படைத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு முன், பிரகாஷ் தரப்பில் இருந்து சிலர் மிரட்டினர். அதேபோல் நிலத்தை விற்ற ேஷாபனாவுக்கும், அவரது தாய்க்கும் மிரட்டல் விடுக்கின்றனர். சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், நாள்தோறும் இரண்டு முறை கையெழுத்து போடுவதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.அ.தி.மு.க., பிரமுகரும், முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் கூறுகையில்,''பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில், தி.மு.க.,வினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர்-கோவை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில், பிர-வீனை தாக்கி விட்டு, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். தாக்குதல் தொடர்பான 'சிசிடிவி' காட்-சிகளை சேகரித்து, போலீசாரிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு, போலீஸ் பாது-காப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.