உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிராக்டர் மீது டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

டிராக்டர் மீது டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

அரவக்குறிச்சி:புகளூர் அருகே செம்மடம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா, 65. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் தோட்டக்குறிச்சியில் இருந்து, வேப்பம்பாளையம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.வேலாயுதம்பாளையம் மேல்நிலைப்பள்ளி மேடு அருகே சென்றபோது, இவருக்கு முன்புறம் பரமத்தி வேலுார், மேல் சாத்தாம்பூர் அருகே உள்ள முருக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அன்பரசு, 47, என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டதால், டூவீலர் மோதியது.இந்த விபத்தில் கருப்பையா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை