உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த மாதம் தொடங்கியது. இந்த குகை வழிப்பாதை அமைக்கும் பணியின் போது, நிலத்தடி நீர் ஊற்றெ-டுப்பதால், பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால், மருதுார், மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, நல்லுார், கூடலுார், கணேசபுரம், பேரூர் பகுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், 10 கிலோ மீட்டர் துாரம் சுற்றி, குளித்-தலை, பெட்டவாய்த்தலைக்கு செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது.எனவே, ரயில்வே நிர்வாகம், குகை வழிப்பாதையை விரைந்து முடித்து வாகனங்களில் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும் என, கிராம பொதுமக்கள் சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி