உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் மழை கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் மழை கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் மழைகால்நடை விவசாயிகள் மகிழ்ச்சிகிருஷ்ணராயபுரம், ஆக. 22-கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருவதால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், குழந்தைப்பட்டி, கருப்பத்துார், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனப்புல் கிடைத்து வருகிறது. மேலும், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு மற்றும் காய்கறி செடிகளுக்கு மழை நீர் கிடைத்து வருவதால் வளர்ச்சியடைந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ