உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.12,047 கோடி முன்னுரிமை கடன்:கரூர் கலெக்டர் தகவல்

ரூ.12,047 கோடி முன்னுரிமை கடன்:கரூர் கலெக்டர் தகவல்

கரூர்: மாவட்டத்தில், 12,047.73 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்கள் கூட்டம் நடந்-தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, முன்னுமை கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டு தேசிய மயமாக்கப்-பட்ட தனியார், கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் வழியாக, 7,214.63 கோடி ரூபாய் வேளாண் கடன், 4,190.01 கோடி ரூபாய் சிறு குறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடன், 643.09 கோடி ரூபாய் இதர முன்னுரிமை கடன் என மொத்தம், 12,047.73 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கை விட, 3,233.91 கோடி ரூபாய் அதிகம்.வேளாண் துறைக்கு மட்டும், 59.88 சதவீதம் தொகை கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 34.78 சதவீ-தமும், இதர முன்னுரிமை கடனுக்கு 5.34 சதவீதமும் ஒதுக்கப்-பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.ஐ.ஓ.பி., முதன்மை மண்டல மேலாளர் பானி, முன்னோடி வங்கி மேலாளர் வசந்த் குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதி-வாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை