உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் விளக்குகள் எரியாததால் அவதி

மின் விளக்குகள் எரியாததால் அவதி

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள், வியாபா-ரிகள் அவதிப்படுகின்றனர்.பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு, சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் செல்கின்றனர். கூலி வேலை செய்யும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பள்ளப்பட்டியில் இருந்து அந்தந்த கிராமங்களுக்கு பஸ்-களில் செல்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் எப்போதும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதுண்டு.இந்நிலையில், பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள உயர் மின் கம்பத்தில் உள்ள விளக்குகள், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக எரியாததால், பயணிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ