உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகை

சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகை

பாலக்கோடு பாலக்கோடு அருகே, சாலை விபத்தில் ஒரே மொபட்டில் சென்ற, 2 வாலிபர்கள், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியாகினர். சாவில் சந்தேகம் உள்ளதென, அவர்களின் உறவினர்கள், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர்.தர்மபுரி மாவட்டம், சொன்னம்பட்டியை சேர்ந்தவர் சுனில்குமார், 19. கெலமங்கலத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் முருகன், 20. தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சுனில்குமார் தன் டி.வி.எஸ்., ஸ்கூட்டி மொபட்டில் முருகனை அழைத்துக் கொண்டு பாலக்கோடு நோக்கி ஹெல்‍மெட் அணியாமல் சென்றார்.சின்னார்தஹள்ளி கூட்ரோடு அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பாலக்கோடு போலீசார், இருவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், இருவரது இறப்பிலும் மர்மம் உள்ளதாக கூறி, சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த அவரின் உறவினர்கள், 200க்கும் மேற்பட்டோர், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை நேற்று மதியம், 3:00 மணியளவில் முற்றுகையிட்டனர். அப்போது, இது திட்டமிட்ட படுகொலை, எனவே, குற்றவாளிகளை கைது செய்யும் வரை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுனில்குமார், முருகன் ஆகியோரது சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறினர். அவர்களிடம், அரூர் டி.எஸ்.பி., ராஜசுந்தர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை