| ADDED : மார் 14, 2024 06:57 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, மருதுார் செக்போஸ்ட்டில் நேற்று முன்தினம் இரவு, வாகனங்கள் அதிகளவு வந்ததால் நின்று சென்றன. அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டாரஸ் லாரி, எம் சாண்ட் மணலுடன் நின்றது. அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, முன்னாள் நின்றிருந்த லாரி மீது மோதியது. அதேபோல், தொடர்ந்து பின்னால் வந்த எம்சாண்ட் ஏற்றி வந்த லாரி டிரைவர், துாக்க கலக்கத்தில் விபத்தில் சிக்கி நின்ற லாரி மீது மோதினார். சில நிமிடங்களில், கோவையில் இருந்து லாரியில் மக்காசோளம், எள், சூரியகாந்தி, தட்டைபயிறு, உளுந்து தாணியங்களை அறுவடை செய்யும் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி டிரைவர் சக்திவேல், துாக்க கலக்கத்தில் விபத்து சிக்கிய லாரி மீது மோதினார்.தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கியவரை மீட்டனர். இதில் லாரி டிரைவர் சக்திவேலுக்கு ஒரு கால் முறிவு ஏற்பட்டது. இவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.விபத்தில், மூன்று லாரிகளின் முன்பகுதி கண்ணாடி சேதம் ஏற்பட்டது.