உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புற்களை அகற்ற வைத்த தீ முதியவர் மீது பற்றியதில் பலி

புற்களை அகற்ற வைத்த தீ முதியவர் மீது பற்றியதில் பலி

அரவக்குறிச்சி : தோட்டத்தில் உள்ள புற்களை அகற்ற வைத்த தீ, தோட்டத்தை சுற்றியும் பரவியதால் வெளியே வர முடியாமல் முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே, டி.வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன், 60. இவர், கரூர் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மணிமாறன் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தரிசு நிலத்தில் உள்ள புற்களை அகற்றுவதற்காக தோட்டத்திற்கு தீ வைத்துள்ளார். தோட்டத்தை சுற்றியும் தீ பரவியதால் உள்ளே சென்ற மணிமாறன் வெளியே வர முடியாமல் தீயில் மாட்டிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.உயிரிழந்த மணிமாறன், மாநகராட்சி பணியில் இருந்து, நாளை, 30-ல் ஓய்வு பெற உள்ள நிலையில் தனது தோட்டத்தில் தீ வைப்பதற்காக சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை