உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு

கரூர்,கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், புத்தாம்பூர் தொடக்கப் பள்ளியில், கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான, கலைத்திருவிழா போட்டி அந்தந்த வட்டார அளவில் சென்ற மாதம் நடைபெற்றது. வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நாட்டுப்புற நடனத்தில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமாரி, திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், இடைநிலை ஆசிரியை தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை