உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரை ஒருவழி பாதையாக மாற்றலாமே

அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரை ஒருவழி பாதையாக மாற்றலாமே

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி நகரில், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால், ஏவிஎம் கார்னரை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்.அரவக்குறிச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடமாக ஏவிஎம் கார்னர் திகழ்கிறது. இப்பகுதியில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. தற்போது, கனரக வாகனங்களின் இருவழி போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சிறிய விபத்துகளும் நிகழ்கின்றன.இதனை தவிர்க்கும் வகையில், அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை