| ADDED : பிப் 10, 2024 10:25 AM
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில், மனைகளை வரன்முறைப்படுத்த வரும், 29ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது என, ஆணையாளர் சுதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன் முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட, கால அவகாசம் வரும், 29ல் நிறைவு பெறுகிறது. எனவே, அனுமதியற்ற மனைப்பிரிவில் மனை வாங்கியுள்ள பொதுமக்கள் வரும், 29க்குள் நகர் ஊரமைப்பு துறையின் இணையதளம் மூலம், விண்ணப்பித்து வரன்முறைபடுத்தி கொள்ளலாம். வரன்முறைப்படுத்தினால் மட்டும், மாநகராட்சியால் கட்ட அனுமதி வழங்கப்படும். சாலை வசதி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.