உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மகன் மாயம்: போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம்: போலீசில் கணவர் புகார்

கரூர்: சின்னதாராபுரம் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஊத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி, 30; இவருக்கு உமா மகேஸ்வரி, 25, என்ற மனைவியும், சந்தோஷ், 6, என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 2 ல் காலை குடும்ப பிரச்னை காரணமாக உமா மகேஸ்வரி, மகன் சந்தோசுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், மனைவியும், மகனும் கிடைக்காததால், போலீசில் பூபதி புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை