| ADDED : டிச 31, 2025 06:14 AM
கரூர்: கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், கல்குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், க.பரமத்தி அருகே பவித்திரத்தில், நேற்று நடந்தது. அதில், புன்னம் கிராமத்தில் கல்குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பது குறித்து, அரசு துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். பிறகு, கல் குவாரி அமைக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், அரசு நிர்ணயம் செய்யும் அளவை தாண்டி, குவாரிகளில் கற்களை எடுக்க அரசு அனுமதிக்க கூடாது எனவும், கல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.அதைகேட்ட சமூக பாதுகாப்பு நலத்திட்ட துணை கலெக்டர் பிரகாசம், பொது மக்களின் கருத்துக்கள், பதிவு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் முடிவுக்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகம் செயல்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் சத்தியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.