மேலும் செய்திகள்
டிச.,13ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
11-Dec-2025
பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்
11-Dec-2025
மோசமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி
11-Dec-2025
கரூர்: கரூர் அருகே, பொங்கல் பரிசு தொகுப்புக்கான, 'டோக்கன்' பெற வந்த பொதுமக்கள், ரேஷன் கடை திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை வரும், 10ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதற்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் குறித்த டோக்கன், நேற்று முதல் வரும், 9 வரை வீடு வீடாக சென்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், நேற்று டோக்கன் வழங்க ஊழியர்கள், வீட்டுக்கு வராததால், கரூர் பசுபதி லே-அவுட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு, 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெற சென்றனர்.ஆனால், காலை, 11:00 மணி வரை ரேஷன் கடை திறக்காததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் குறித்த, கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருவதால், டோக்கன் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
11-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025