| ADDED : ஜன 08, 2024 11:34 AM
கரூர்: கரூர் அருகே, குழாய் பராமரிப்புக்காக தோண்டிய பள்ளம், திறந்த நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.கரூர் மாநகராட்சி, ஆண்டாங்கோவில் சாலை அண்ணா நகர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், குழாய் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பராமரிப்பு பணி நிறைவு பெற்ற நிலையில், பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. ஆண்டாங்கோவில் சாலை பகுதியில் ஏராளமான வீடுகள், ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், தனியார் பள்ளி, வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் டீ கடைகள் அதிகளவில் உள்ளன. இதனால், ஆண்டாங்கோவில் சாலை பகுதியில், வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்நிலையில், குழாய் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, குழாய் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.