உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் இருந்து மீண்டும் சென்னைக்கு அரசு பஸ் இயக்கம்

குளித்தலையில் இருந்து மீண்டும் சென்னைக்கு அரசு பஸ் இயக்கம்

குளித்தலை: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் சேவை, மீண்டும் துவங்கியது, குளித்தலையில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக தினசரி இரவு, 8:30 மணியளவில் சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல், பெட்டவாய்த்தலையில் இருந்து சென்னைக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 2020 கொரோனா காலக்கட்டத்தில், பஸ் போக்குவரத்து நிறுத்தம் செய்தபோது, இந்த இரண்டு பஸ்கள் போதிய லாபம் இன்றி நிறுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, போக்குவரத்து கழகத்தில் வெகு துாரம் செல்லும் பஸ்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டதாலும், இரு பஸ்கள் நிறுத்தம் செய்யப்பட்டன.ஆனால், முசிறி பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் இரவு, சென்னைக்கு சென்ற பஸ் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, குளித்தலை பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் பொது மக்கள் முசிறி, திருச்சி சென்று சென்னைக்கு பஸ் பயணம் செய்து கொண்டிருந்தனர். பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வரிடம் குளித்தலையிலிருந்து இயக்கப்பட்ட சென்னை பஸ் மீண்டும் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். முதல்வர் உத்தரவின்படி, போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தல் படி, சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கடந்த, 3ம் தேதி இரவு 9:00 மணிக்கு சென்னைக்கு தினசரி அரசு பஸ் சேவை வசதி தொடங்கப்பட்டது. எம்.எல்.ஏ., மாணிக்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவி ராஜா, அரசு வக்கீல் சாகுல் அமீது, நகர துணை செயலர் செந்தில்குமார், பொருளாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தினமும் இரவு 9:00 மணிக்கு குளித்தலையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் விடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி