உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள் அடிதடி: ஓட்டம் பிடித்த பயணிகள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள் அடிதடி: ஓட்டம் பிடித்த பயணிகள்

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரி-யாக தாக்கி கொண்டதால், பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.கரூர் மாவட்டம், தென்னிலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி செயல்படுகிறது. நேற்று மாலை, 5:00 மணிக்கு கல்லுாரி நேரம் முடிந்த பிறகு, ஒரே பஸ்சில் பொறியியல் கல்லுாரி மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களும் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டுள்-ளனர்.அப்போது, பொறியியல் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் பஸ்சில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நி-லையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய இருதரப்பை சேர்ந்த மாணவர்களும், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பயணிகள், அலறியபடி ஓடினர். பஸ் ஸ்டாண்டில், பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகம், போலீஸ் ஏட்டு சதீஷ் குமார் ஆகியோர், மாணவர்களை பிடிக்க ஓடினர். போலீசாரை பார்த்-ததும், பாலிடெக்னிக் மாணவர்கள் தப்பி ஓடினர். பிறகு, தாக்கு-தலில் காயமடைந்த, பொறியியல் கல்லுாரி மாணவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதனால், பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை