உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் - ஈரோடு சாலை விரிவாக்க பணி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை

கரூர் - ஈரோடு சாலை விரிவாக்க பணி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை

கரூர் : கரூர்-ஈரோடு சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.கரூர் - ஈரோடு- மாநில நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும், சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதையொட்டி, சாலையின் இருபுறமும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிகற்கள், கிராவல் மண், சிமென்ட் கலந்த கலவையை அதனுள் போட்டு, சாலை விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.தற்போது புன்னம்சத்திரம் அருகில், விரிவாக்கப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. சாலையோரம் பள்ளம் தோண்டப்படும் இடங்களில், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விபத்துகளை தடுக்கும் வகையில், தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வாய்க்கால் செல்லும் இடங்களில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. நொடிப்பொழுதில் சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்தால், உயிரிழப்பு என்பதை தவிர்க்க முடியாமல் போய்விடும். சாலை விரிவாக்கப்பணி பகுதிகளில், கூடுதலாக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போலீஸ்துறை முன்வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை