உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கரூர்: கரூர் அருகே விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 1 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பல்வேறு இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். கரூர் அருகே சுக்காலியூர் பகுதிகளில் மூன்று அடி முதல் 15 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது. காமதேனு, கோவில் கோபுர பின்னணி, மா, பலா, வாழை என அழைக்கப்படும் முக்கனிகளில் விநாயகர், புலி, சிங்கம், எலி, யானை, தாமரை, அன்னப்பறவைகளில் விநாயகர் அமர்ந்திருக்கும் சிலைகள், சூரனை வதம் செய்வது போன்ற பல்வேறு அமைப்புகளில் விநாயகர்கள் சிலைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது வர்ணம் பூசும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.'கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வரும் 31 ம் தே தி காலை பல்வேறு இடங்களி ல் 108 சிலைகள் பிரதிஷ் டை செய்யப்படுகிறது. 1 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 2 ம் தேதி காவிரியா ற்றில் விநாயகர் சிலைகள் வித ர்சனம் செய்யப்படுகிறது' என இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் சுருளிராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை