| ADDED : டிச 27, 2025 05:10 AM
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி அருகே, துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை பறித்தவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சியில், இரவு நேரத்தில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து, வீடு புகுந்து தாலி செயினை பறித்துச் சென்றது தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவா, 30, என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் மீண்டும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில், ஈடுபட வாய்ப்பு உள்ளதாக கருதி, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்ற அடிப்படையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துறை பரிந்துரை செய்தது.இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சிவாவிடம் வழங்கி, கரூர் கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.