உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்

மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்

குளித்தலை, கரூர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், 41, நேற்று முன்தினம் மதியம் 2:40 மணியளவில் தனது கார் டிரைவர் உதவியுடன், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கருரில் பகுதியில் இருந்து, திருச்சிக்கு வேகமாக சென்ற டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 7 யூனிட் கிராவல் மண் உரிய அனுமதியில்லாமல் கடத்தியது தெரியவந்தது.டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த எழுமூரை சேர்ந்த டிரைவர் மதன்குமார், 27, அதேபோல் மற்றொரு லாரியில், 7 யூனிட் கிராவல் மண் கடத்திய கரூர் ஜெகதாபியை சேர்ந்த வடிவேல், 37, மற்றும் டாரஸ் லாரியில் 8 யூனிட் பெல்ஸ் பார்க் கனிமம் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.லாரியின் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த மல்லுார்பட்டியை சேர்ந்த தாமஸ், 41, ஆகிய மூன்று பேரை மாயனுார் போலீசார் கைது செய்தனர். மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை