உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜைபுகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு தை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், தை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.* புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று மாட்டு பொங்கல் விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. பிறகு, மூலவர் அம்மன் பல்வேறு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். கரூர் ஆயுதப்படை போலீஸ்வளாகத்தில் பொங்கல் விழாகரூர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கிராமம் போல செட் அமைக்கப்பட் டு, போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர், பொங்கல் வைத்து கொண்டாடினர். போலீசார் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.விழாவில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன், மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம், கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பிர பாகர் மற்றும் ஏ.டி.எஸ்.பி., க்கள், டி.எஸ். பி., க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங் கேற்றனர்.சட்ட விரோத மதுவிற்பனை5 பேர் அதிரடி கைதுகரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்ததாக தங்கம்மாள், 57; சோனியா, 29; சரவணன், 44; கஜேந்திரன், 46; குமார், 46; உள்பட, ஐந்து பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.பாம்பு கடித்ததில்விவசாயி பலிதென்னிலை அருகே, பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 62; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் காயம் அடைந்த, முத்துசாமியை உறவினர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.ஆமை வேகத்தில் நடக்கும்நிழற்கூடம் கட்டுமான பணிகரூர் மாநகராட்சிக்குட்பட்ட நரிகட்டியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நரிகட்டியூர் வழியாக பல்வேறு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இங்குள்ள, பஸ் ஸ்டாப்பில் தினமும் பலர் பஸ்சுக்காக காத்திருப்பர். நிழற்கூடம் இல்லாத காரணத்தால், வெயில், மழையில் நின்று வருகின்றனர். அங்கு, நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிழற் கூடம் கட்டுமான பணி துவங்கியது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த பகுதி மக்கள் நலன் கருதி கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்டரிநாதன் கோவிலில்திருக்கல்யாண உற்வசம்கரூர் பண்டரிநாதன் பஜனை மடம் கோவிலில், 101 வது ஆண்டு திருக்கல்யாண உற்வசம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற கோவிலில் நேற்று காலை, பண்டரிநாதர், ரகுமாயி தாயார் உற்சவ மூர்த்தி களுக்கும், மூலவர்களுக்கும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, காப்பு கட்டப்பட்டு, சீர் தட்டுகள் ஊர்வலம் நடந்தது. பண்டரிநாதன் சுவாமிக்கும், ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பண்டரிநாதன் பஜனை மடம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.மறியல் செய்தவர்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவுகுளித்தலை அடுத்த, சிந்தாமணிபட்டி வரவனை பெருமாள் கோவில் முன்புறம், நேற்று முன்தினம் மாலை கோவில் பிரச்னை சம்பந்தமாக, வரவனை கிராமத்தை சேர்ந்த அங்குசாமி, கோவில் பூசாரி செந்தில்குமார் மற்றும் சிலர் அரசு அனுமதியில்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் எச்சரிக்கை செய்தும், கேட்காததால் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவெம்பாவை பயிற்சிமாணவிகளுக்கு பரிசுகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மார்கழி மாத திரும்வெம்பாவை பயிற்சி நிறைவு விழா நடந்தது.அதில் பயிற்சி பெற்ற, 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உபயதாரர்கள் வழங்கிய வெள்ளி நாணயங்கள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், சாப்பாடு பை உள்ளிட்ட, பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தண்டபாணி ஓதுவார், 30 நாட்கள் பயிற்சியை நடத்தினார்.நிறைவு விழாவில், கோவில் செயல் அலுவலர் சரவணன், திருச்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், கோபால், மருதநாயகம், விவேகானந்தன், தங்கவேல், மனோகரன், சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத விளக்குகள்கரூர்- திருமாநிலையூர் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில், இரவு நேரத்தில் பெரும்பாலான விளக்குகள் எரியாமல் உள்ளது.கரூர் மற்றும் திருமாநிலையூர் நகரங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்த பாலம் பல, ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அப்போது, பாலத்தின் இருபக்கமும் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிந்ததால், அமராவதி ஆறும் வெளிச்சத்தில் திளைத்தது.தற்போது, பாலத்தில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது. குறிப்பாக, ஒரு பக்கம் உள்ள அனைத்து விளக்குகளும் இரவு நேரத்தில் கடந்த சில நாட்களாக எரிவது இல்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.கரூர் நகரில் இருந்து, திருச்சி, திண்டுக்கல் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த பாலம் வழியாக செல் கின்றன.இதனால், புதிய உயர் மட்ட பாலத்தில் உள்ள அனைத்து விளக்கு களையும் எரிய வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழிலாளி மீது தாக்குமூன்று பேர் அதிரடி கைதுகுளித்தலை அடுத்த, திருக்காம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முகிலன், 19, கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மதியம் பகவதி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அதே ஊரை சேர்ந்த ரகு, 27, பாரதிராஜா, 23, தனியார் கம்பெனி லோடு மேன் சதீஷ்குமார், 27, லாரி டிரைவர் பிரசாந்த் ஆகிய நான்கு பேர் சேர்ந்து முகிலனிடம் தகாத வார்த்தையில் பேசி, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து முகிலன் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரகு, பாரதிராஜா, சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பிரசாந்த் தலைமறைவாக உள்ளார்.தாயார் இறந்த துக்கத்தில்போதைக்கு அடிமையானவர் சாவுதாயார் இறந்த துக்கத்தில், மது போதைக்கு அடிமையானவர் இறந்தார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே விஸ்வநாதபுரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 35. இவரது மனைவி கவிதா, 34. சந்திரசேகரின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த சந்திரசேகர், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சந்திரசேகர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கவிதா அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.20 குறள்களை ஒப்புவித்தால்ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசுஅரவக்குறிச்சியில், பெட்ரோல் பங்க் ஒன்றில், 20 திருக்குறள்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.கரூரிலிருந்து, மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அடுத்துள்ள தடாகோவில் அருகே, வள்ளுவர் பெட்ரோல் பங்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பங்க்கில் திருவள்ளுவர் தினத்தன்று, 20 திருக்குறள்களை ஒப்புவித்து அதற்கான விளக்கத்தை மாணவர்கள் அளித்தால், அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் வள்ளுவர் தினமான நேற்று, போட்டி துவங்கியது. இதையறிந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் வள்ளுவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, திருக்குறள்களை ஒப்புவித்து பெட்ரோலை பரிசாக பெற்றுச் சென்றனர்.ரூ.22.38 லட்சம் ரூபாய்க்குகாய்கறி, பழங்கள் விற்பனைகரூர் உழவர் சந்தையில் கடந்த மூன்று நாட்களில், 22.38 லட்ச ரூபாய் மதிப்பில் காய்கறி, பழங்கள் விற்பனையானது.பொங்கல் விழா கடந்த, 14ல் போகியுடன் தொடங்கியது. இதனால், கரூர் உழவர் சந்தையில் காய்கள், பழங்களை வாங்க மக்கள் குவிந்தனர். கடந்த, 14 முதல் நேற்று வரை கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 58 ஆயிரத்து, 522 கிலோ காய்கறிகள், 5,775 கிலோ பழங்கள், 630 கிலோ மலை காய்கள் விற்றுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு, 22 லட்சத்து, 38 ஆயிரத்து, 235 ரூபாய். 299 விவசாயிகளும், 10 ஆயிரத்து, 826 நுகர்வோரும் மூன்று நாட்களில், கரூர் உழவர் சந்தைக்கு வந்துள்ளனர்.திருநங்கையர் விருதுக்குவிண்ணப்பிக்க அழைப்பு'திருநங்கையர் விருது பெற விண்ணப்பிக்கலாம்' - என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில் திருநங்கையர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில் விருது அளிக்கப்படுகிறது. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. awards.tn.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாக வரும் ஜன., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு கரூர் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி, 04324 -255009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் 273 இடங்களில்பொங்கல் விழா கொண்டாட்டம் ஜோர்கரூர் மாவட்டத்தில், 273 இடங்களில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.கரூர் மாவட்டத்தில், உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட, பல் வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தவிர, வெள்ளியணை பகுதியில், 23, மாயனுார், 13, லாலாப்பேட்டை, 8, க.பரமத்தி, 19. தான்தோன்றிமலை, 15, தோகமலை, 5, வெங்கமேடு, 36; பாலவிடுதி, 30; வாங்கல், 45, பசுபதிபாளையம், 21, வேலாயுதம்பாளையம், 30, தென்னிலை, 6, குளித்தலை, 22 இடங்கள் உள்பட, கரூர் மாவட்டத்தில் போலீஸ் அனுமதியுடன், 273 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்க ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.பெரியார் நகருக்கு சாக்கடைவடிகால் வசதி வேண்டும்க.பரமத்தியில் உள்ள பெரியார் நகருக்கு, தேவையான சாக்கடை வடிகால் வசதியை ஏற்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.க.பரமத்தி பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியார் நகரில், 20 ஆண்டுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்டோக்கு இலவச வீட்டு மனைப்பட்டா தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அதில், இந்திரா நினைவு குடியிருப்பு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ், 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது.இதனை தவிர அந்த நிலத்தில் சிலர் சொந்தமாகவும் வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர். தற்போது, 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு, போதுமான சாக்கடை வசதியில்லாததால் வீட்டு வாசலிலேயே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாக்கடை வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தேங்காய் மட்டை லாரிகளால்சாலையில் விபத்து அபாயம்லாரிகளில் திறந்தபடி தேங்காய் மட்டைகளை ஏற்றிச்செல்லும்போது, அதலிருந்து சிதறும் மட்டைகளால், மற்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.கரூர், வேலாயுதம்பாளையம், வாங்கல் போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன.ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு முக்கிய தேவை காய்ந்த தென்னை மட்டைகள், மாவட்ட பகுதிகளில் இருந்து வேன் மற்றும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.இதனை ஏற்றிச்செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மேற்புறம் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால், சில தென்னை மட்டைகள் சாலைகளில் விழுகின்றன.இதனால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையின் மைய பகுதியில் விழுந்து கிடக்கும் தென்னை மட்டைகளால், பைபாஸ் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை மட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.மாட்டு பொங்கலை முன்னிட்டுகால்நடைகளுக்கு துாய்மை பணிகிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை துாய்மை செய்து அலங்காரம் செய்யப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், கோடங்கிப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பசு, ஆடு, காளைகளை தண்ணீரில் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு நேரத்தில் மாட்டு பொங்கல் வீடுகளில் வைக்கப்பட்டு, பொங்கல் உணவு கால்நடைகளுக்கு ஊட்டப்பட்டது.கிராமங்களில் மாட்டு பொங்கல்கரும்பு, பானை விற்பனை ஜோர்கரூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் நேற்று மாட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பானை, கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை களை கட்டியது.தமிழகத்தில் கடந்த, 14ல் போகியுடன் பொங்கல் திருவிழா தொடங்கியது.நேற்று முன்தினம் நகரப்பகுதிகளில் வீடுகளில் சூரிய பொங்கல் வைத்து, பொதுமக்கள் கொண்டாடினர். நேற்று மாட்டு பொங்கல் திருநாளை யொட்டி, உழவு தொழிலுக்கு உறுதுணையாக உள்ள கால் நடைகளை, விவசாயிகள் குளிப்பாட்டினர். பிறகு, பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு ஊட்டப்பட்டது.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளை ஒட்டியுள்ள அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் மற்றும் தோகமலை, கடவூர் ஆகிய கிராமப்பகுதிகளில் மாட்டு பொங்கல் விழா களை கட்டியிருந்தது.கரும்பு ஒரு ஜோடி, 80 ரூபாய், மண் பானைகள், 100 முதல், 150 ரூபாய், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 10 முதல், 30 ரூபாய் வரை விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை