உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

வெங்காய வியாபாரிக்குமிரட்டல் விடுத்தவர் கைதுகரூர் வ.உ.சி., வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன், 40; வெங்காய வியாபாரி. இவர், நேற்று முன்தினம், தனக்கு சொந்தமான, 'டாடா ஏசி' சரக்கு வாகனத்தில் வெங்காயம் ஏற்றிக்கொண்டு, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, மருதுார் பிரிவு சாலையில், திருச்சி மாவட்டம், கீரமங்கலத்தை சேர்ந்த பாலு, 40, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துள்ளார். இதனால் ராஜசேகரன் சத்தம்போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு செக்போஸ்டில் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மிரட்டல் விடுத்த பாலுவை பிடித்து, குளித்தலை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், பாலுவை கைது செய்தனர்.வல்லம் கிராமத்தில்எள் சாகுபடி மும்முரம்கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்.,க்குட்பட்ட வல்லம், கொம்பாடிப்பட்டி ஆகிய கிராமங்களில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். அறுவடை முடிந்த நிலையில், வயல்களில் குறைந்த தண்ணீரில் வருவாய் தரக்கூடிய எள் சாகுபடியை செய்துள்ளனர். இதில், விளை நிலங்கள் உழவுசெய்யப்பட்டு, எள் விதைகள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது விதைப்பு நடந்த வயல்களில் எள் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. சில மாதங்களில் எள் வளர்ச்சி அடைந்து அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் கூறினர்.கரூர் மாநகராட்சி ஆபீசில்பொது மருத்துவ முகாம்கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், 88ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சுதா தலைமை வகித்தார். மேயர் கவிதா தொடங்கி வைத்தார். இதில், நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, கண் பரிசோதனை, முழு உடற்பரிசோதனை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 400-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் வசந்தகுமார், மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.மதுவிற்ற 23 பேர் கைதுசட்ட விரோதமாக மதுவிற்ற, 23 பேரை கைது செய்த போலீசார், 180 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 180 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக, 23 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.மாசடச்சி அம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்கரூர் மாவட்டம், க.பரமத்தி யூனியனுக்குட்பட்ட, குப்பம் கிராமத்தில் உள்ள தலையூத்துப்பட்டியில், மாசடச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை, 7:35 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகம், பஞ்சகாவியம், கலச பூஜை, 108 மூலிகை மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, அபிஷேகம், அர்ச்சனை, கோபூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.பின், யாக வேள்வியில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச்சென்று, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில், கோவிலுக்கு பாத்தியப்பட்ட அரிச்சந்திர குல பங்காளிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.கரூர் அருகே பயனற்று கிடக்கும் பொது கழிப்பிடம்கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் அருகே காவிரியாற்று பகுதியில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அதை பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், நெரூர் தென்பாகம் காவிரியாற்று பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து, முட்புதர்களால் சூழப்பட்டுள்ள கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.பிள்ளபாளையம் பஞ்.,ல்குடிநீர் குழாய் பராமரிப்புபிள்ளபாளையம் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்கள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பிள்ளபாளையம் வாய்க்கால் கரை அருகில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பாலம் பணி நடப்பதால், குடிநீர் குழாய் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இதில், பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. இப்பணிகளில் பஞ்., தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பணிகள் முடிந்ததும், வழக்கம்போல் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.கடும் பனிப்பொழிவுவாகன ஓட்டிகள் அவதிகரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.தமிழகத்தில் பெரும்பலான மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் எனவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வறண்ட வானிலை காணப்படும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கரூர் - திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று காலை, 8:30 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.மாற்றுக்கட்சியினர்பா.ஜ.,வில் ஐக்கியம்குளித்தலை நகர பா.ஜ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு, குளித்தலை நகராட்சி, 2, 3வது வார்டு பகுதியில் உள்ள மாற்றுக்கட்சியினர் மற்றும் புதிய வாக்காளர்கள் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் மணத்தட்டை பிரசாத் முன்னிலையில், 10க்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள், மாற்று கட்சியினர் இணைந்து கொண்டனர். நகர பொதுச்செயலாளர்கள் கண்ணன், ஸ்ரீதர் ராஜப்பா, பொருளாளர் அன்பரசன், இளைஞரணி தலைவர் ஆனந்த், நகர துணைத்தலைவர் ரத்தினம், நகர ஐ.டி., விங் தலைவர் நல்லையன் மற்றும் நகர பா.ஜ.,வினர் கலந்துகொண்டனர்.ரயில்வே ஆலோசனைக்குழுஉறுப்பினர் நியமனம்: பா.ஜ.,கரூர் மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளராக இருப்பவர் சக்திவேல் முருகன். இவர், கரூர் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், ''கரூர் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிகளுக்கு, 'அம்ருத் பாரத்' ரயில்நிலைய விரிவாக்க திட்டத்தில், 34 கோடி ரூபாய் புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. அவை முடிவடைந்த பின், கரூர் ரயில் ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்ட ரயில்நிலையமாக இருக்கும். இந்த பதவி மூலம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பேன்,'' என்றார்.ரஸ்தாளி ரூ.350க்கு விற்பனைகிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.பெண்ணுக்கு கத்திக்குத்துதம்பதியர் மீது வழக்குப்பதிவுகுளித்தலை அடுத்த மாவத்துார் பஞ்., நாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநதி, 26; டெக்ஸ் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் முனியப்பன், 28; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 4ல் சண்முகநதி வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். அங்கு வந்த முனியப்பனின் மனைவி பிரேமா, 26, சண்முக நதியை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.அப்போது, வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகநதியை, பிரேமா தன் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினார். மனைவியின் சத்தம் கேட்டு கணவர் மாரிமுத்து வந்து பார்த்தபோது, முனியப்பன் தப்பி ஓடிவிட்டார். ரத்த காயத்தில் இருந்த மனைவி சண்முகநதியை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து, சண்முகநதி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் பிரேமா, அவரது கணவர் முனியப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.சேதமான சாலைசீரமைக்க கோரிக்கைகுளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., வேதாச்சலபுரம் பகுதியில் சாக்கடை பணிக்காக, ஜல்லி, கிராவல் மண், சிமென்ட் ஆகிய கட்டுமான பொருட்களை லாரிகளில் ஏற்றி கொண்டு சென்று வருகின்றனர். இதேபோல், சில தினங்களுக்கு முன், கிராவல் மண் ஏற்றிக்கொண்டு, தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் அருகே, பரந்தாடி செல்லும் குறுக்கு சாலை திருப்பத்தில் லாரி ஒன்று சென்றது.அப்போது, குடிநீர் குழாய் உடைந்து, சீரமைப்பு பணிக்காக தோண்டிய குழியில் சிக்கியது. இதனால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, தொடர்ந்து குடிநீர் கசிந்து வருகிறது. இதனால், வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைத்து தர, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாய நிலம் அருகே பிளாஸ்டிக் குப்பைகரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு, நெல், கோரை, சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், கரூர் - நெரூர் சாலை, சந்தன காளிபாளையத்தில் உள்ள விவசாய நிலம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளால், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமல்லது, கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே விவசாய நிலம் அருகில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமற்ற சிறுபாலம் அகற்றம்'காலைக்கதிர்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, தரமற்ற சிறுபாலம் இடித்து அகற்றப்பட்டது.குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., விநாயகபுரத்திலிருந்து தெற்குபட்டி சமுதாயகூடம் வரை, கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த, மூன்று மாதத்திற்கு முன் புதிதாக கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. டவுன் பஞ்., சமுதாயக்கூடம் அருகே பாதியக்காவல்காடு செல்லும் சாலையின் குறுக்கே, கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் சிறுபாலம் கட்டப்பட்டது.ஆனால், இரண்டு மாதத்திலேயே கான்கிரீட் தளம் உடைந்து ஓட்டை விழுந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று காலை, டவுன் பஞ்., தலைவர் மற்றும் செயல் அலுவலர் வேல்முருகன் உத்தரவுப்படி, ஒப்பந்ததாரர் சிறுபாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி, ஒப்பந்ததாரர் தரமற்ற பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி