உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மோதி ஒருவர் காயம்

டூவீலர் மோதி ஒருவர் காயம்

அரவக்குறிச்சி : கரூர் மாவட்டம், தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கவேல், 50. இவர் நேற்று தளவாபாளையத்தில் இருந்து, புகளூர் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, அதே சாலையில் கடம்பங்குறிச்சியை சேர்ந்த சசிகுமார், 38, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், சைக்கிளுடன் கீழே விழுந்த தங்கவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.தங்கவேல் மகன் ராமநாதன் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ