உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம்

கரூர்: தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்க(சி.ஐ.டி.யு.,) மாநில நிர்வாக குழு கூட்டம், தலைவர் கவுதமன் தலைமையில், கரூர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், தாயுமா-னவர் திட்டத்தில் ஏற்று கூலி, இறக்கு கூலியாக, 500 ரூபாயும்; ரேஷன் கடை விற்பனையாளர் படியாக, 500 ரூபாயும் வழங்க வேண்டும். கரூரில் பாம்பு கடித்து இறந்த விற்பனையாளர் பிரபா-கரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பொது வினியோக திட்டத்தை தனித்து-றையாக அறிவிக்க வேண்டும். புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய, ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்-செயலாளர் செல்வராஜ், செயலாளர் துரைசாமி, மாவட்ட செய-லாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ