உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வழியாக சிறப்பு கோடைக்கால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் வழியாக சிறப்பு கோடைக்கால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கோடைக்காலம் நெருங்குவதையொட்டி, கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சேலத்துக்கு ரயில்வே வழித்தடம் உள்ளது. ஆனால், கரூர் வழியாக அதிக ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இயக்கப்படும் ரயில்கள்தான் செல்கிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிகின்றனர்.அதே போல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெங்களூரு, திருப்பூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும், பஸ்களையே நம்பி உள்ளனர். தற்போது, பஸ் கட்டணத்தை விட, ரயிலில் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு, வரும் மார்ச் மாத இறுதியில் கோடைவிடுமுறை விடப்பட உள்ளது.அரசு மற்றும் தனியார் பஸ்களில் உட்கார இடம் இல்லாமல், நீண்ட துார பயணத்துக்கு நின்று கொண்டு செல்ல முடியாது. எனவே, கரூர் வழியாக கோடைக்காலத்தையொட்டி, சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை