உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெற்றிலை விலையில் மாற்றமின்றி சீரான விற்பனை

வெற்றிலை விலையில் மாற்றமின்றி சீரான விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெற்றிலை சீரான விலையில் விற்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கொம்பாடிப்பட்டி, மகிளிப்பட்டி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் பரவலாக வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலைகள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், 100 கவுளி கொண்ட மூட்டை, 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்றும் இதே விலையில் வெற்றிலை விற்பனையானது. கொள்முதல் செய்யப்படும் வெற்றிலைகள், சிறிய மூட்டைகளாக கட்டப்பட்டு, வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை