மேலும் செய்திகள்
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
27-Dec-2025
தாலி செயினை பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
27-Dec-2025
மொபைல்போன் டவரில் ஒயர் திருடிய மூவர் கைது
27-Dec-2025
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேரணி
27-Dec-2025
கரூர், கரூர் அருகே, சிறுபாலம் அமைக்கப்பட்ட இடத்தில், இணைப்பு தார்ச்சாலை அமைக்கப் படாததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, வெங்கமேடு அருகே அருகம்பாளையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின், குறுக்கே இணைப்பு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி, கரூர் அருகே அருகம்பாளையத்தில், கடந்த மாதம் சாலையின் குறுக்கே, சிறு பாலம் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சிறுபாலத்தின் இரண்டு பக்கங்களில், இணைப்பு தார்ச்சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், தார்ச் சாலை அமைக்கப்படவில்லை.இதனால், அந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். அருகம்பாளையத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்ட இடத்தில், இணைப்பு தார்ச் சாலை அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
27-Dec-2025
27-Dec-2025
27-Dec-2025
27-Dec-2025