| ADDED : ஜன 24, 2024 10:13 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை புகழூர் பிரிவில், குழாய் மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புகழூர் பிரிவில் பல மாதங்களாக, குழாய் உடைந்த நிலையில், அதில் இருந்து வெளியேறும் குடிநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது.இதுகுறித்து, அந்த பகுதி யை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதனால், உடைந்த குழாயை சரி செய்யும் பணிக்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பள்ளம் தோண்டப்பட்டு, பல நாட்கள் ஆகிறது. ஆனால், பணிகள் முடிந்த பாடில்லை. பள்ளமும் திறந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, வேலாயுதம்பாளையம் அருகே, புகழூர் பிரிவில் உடைந்த குடிநீர் குழாயின், சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.