உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையில் முற்செடிகள் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் முற்செடிகள் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் நாகனுார் பஞ்., தோகைமலை பாளையம் நெடுஞ்சாலையில் இருந்து, பிள்ளைக்கோடங்கிப்பட்டி, மாகாளிப்பட்டி வழியாக கழுகூர் பஞ்., ஏ.உடையாப்பட்டியில் உள்ள குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலை வரை தார்ச்சாலை செல்கிறது.ஆறு கி.மீ., வரை செல்லும் இந்த சாலையை நாகனுார், கழுகூர் பஞ்., மற்றும் சின்னையம்பாளையம், போத்துராவுத்தன்பட்டி பஞ்., சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கனரக வாகனங்கள் உள்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் சாலையின் இருபுறமும் அதிகமான புற்கள், முட்புதர்கள் படர்ந்து கானப்படுகிறது. இதனால் நாகனுார் -ஏ.உடையாபட்டி நெடுஞ்சாலை சுருங்கி காட்சி அளிக்கிறது.இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக முட்புதர்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாலையின் இருபுறமும் படர்ந்து இருக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என, இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை