உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

கரூர்; டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், குளித்தலை அருகே, கழுகூர் கிராம், எஸ்.வளையப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுகூர் கிராம், எஸ்.வளையப்பட்டியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை வழியாக பள்ளி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட பலர் செல்கின்றனர். இந்த கடையில் மது குடிப்பவர்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பெண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன், தாயுடன் சென்ற, 7 வயது குழந்தையை மது போதையில் இருந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்லும் நிகழ்வும் நடந்தது. அது சம்பந்தமாக தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை கைது செய்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை