உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மகன்கள் மாயம்; போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன்கள் மாயம்; போலீசில் கணவர் புகார்

கரூர்: கரூர் அருகே மனைவி, மகன்களை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி குடித்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 29, இவருக்கு பிரின்ஷா, 26, என்ற மனைவி, கிரித்விக், 4, ஆத்விக், 1, என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம் பிரின்ஷா, இரண்டு மகன்களுடன் வீட்டில் இருந்து, வெளியே சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், பிரின்ஷா மகன்களுடன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பிரபாகரன், போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ