உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

கரூர்: உழவர் நல சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைத்தால், விவசாயிக-ளுக்கு தரமான இடுபொருட்கள், உரங்களை வழங்குவதோடு தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்க முடியும்.இம்மையத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும் வாய்ப்புள்ளது. 300 சதுர அடியில் மையம் அமைத்து, வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்ப-வர்கள், 10 லட்சம் ரூபாய் வரையான முதலீட்டில் தொழில் துவங்கலாம்.இதற்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 600 சதுர அடியில் மையம் அமைத்தால், 20 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 6 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். வேளாண், வேளாண் சார்ந்த படிப்பு முடித்த பட்டதாரிகள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்க-ளுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ