உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாமல்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சாமல்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட சாமல்பட்டியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூர்-பாண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண், 66 ல்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியுள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு மாதந்தோறும் பவுர்ணமியின் போது, ஆயிரக்கணக்கான பஸ்களும், டூரிஸ்ட் வேன்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில்தான் சாமல்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக பொக்காரோ, கோவை, கன்னியாகுமரி, ஹைதராபாத், ஏற்காடு, மங்களூர், கொச்சின் எக்ஸ்பிரஸ்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வெளியூர் வாகனங்கள் ரயில்வே கேட்டில் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. கூடுதல் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாமல்பட்டி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு, அரசு விரைந்து ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை