| ADDED : ஆக 10, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, திரவ குளோரின் அமைப்புகள் இரண்டு அமைக்கப்-பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் தலா, இரண்டு மின் மோட்டார்கள் வீதம் மொத்தம் நான்கு குளோரின் பம்புகள் உள்ளன. தற்போது நான்கு குளோரின் பம்புகளும் அரிப்பு ஏற்-பட்டு முற்றிலும் பழுதடைந்து இயக்க முடியாத நிலையில் உள்-ளது. எனவே, மேற்கண்ட நான்கு குளோரின் பம்புகளையும் மாற்றி அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் காலி இடத்தில் ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து, மாத வாடகைக்கு விடுவது உள்ளிட்ட, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி, நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.