உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செம்மண் கடத்திய 2 டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய 2 டிப்பர் லாரி பறிமுதல்

தொப்பூர்: தர்மபுரி மாவட்ட, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கத்துக்கு, தொப்பூர் சுற்றுவட்டாரத்தில், கிராவல் மற்றும் செம்மண் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு ரோந்து சென்றார். இந்நிலையில், முத்து என்பவருக்கு சொந்தமான இடத்திலிருந்து, உரிய அனுமதியின்றி ‍பொக்லைன் இயந்திரம் மூலம், செம்மண் வெட்டி, 2 டிப்பர் லாரியில் ஏற்றினர். அப்போது, புவியியல் துறை அதிகாரியை கண்டவுடன் பொக்லைன் டிரைவர் அங்கிருந்து வாகனத்துடன் தப்பினார். மற்றொரு டிப்பர் லாரி டிரைவரான, சேலம் மாவட்டம், கொங்கரப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், 29, என்பவர் மற்றும் 2 டிப்பர் லாரிகளை, புவனமாணிக்கம் தொப்பூர் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். டிரைவரை கைது செய்த போலீசார், தப்பிய மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை