உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருட்கள் விற்பனையை கண்காணிக்க தனிப்படை: எஸ்.பி.,

போதை பொருட்கள் விற்பனையை கண்காணிக்க தனிப்படை: எஸ்.பி.,

கிருஷ்ணகிரி:''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போதை பொருட்கள் விற்பனையை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை, 22 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, 4 மாதங்களில், 153 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், 114 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு போன, 2 கோடியே, 12 லட்சத்து, 69 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்பிலான பொருட்களில், 1 கோடியே, 33 லட்சத்து, 6,425 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் குருபரப்பள்ளி ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை போன வழக்கில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட ராணிப்பேட்டை நவீன், போச்சம்பள்ளி சுரேஷ் ஆகியோரை கைது செய்து, 28 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்ற வழக்கில், 40 பேர், புகையிலை பொருட்கள் விற்றதில், 138 பேர் கைது செய்யப்பட்டு, 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து கண்காணிக்க, 5 உட்கோட்டத்திலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள, 9 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதை பொருட்களை சாதாரணமாக பையில் வைத்து எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தீவிர கண்காணிப்பு, ரகசிய தகவல் மூலமாகவே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுத்து, கைது செய்கிறோம். சிறு கடைகளில் விற்கப்படும் போதை பொருட்கள் எவ்வாறு அங்கு வருகிறது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை