உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

ஓசூர், சூளகிரி அடுத்த சானமாவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, 30; ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த சுமித்ரா, 35 என்ற பெண்ணுடன் கடந்த, 5 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமகிருஷ்ணாவுடனான உறவை சுமித்ரா துண்டித்துள்ளார். நேற்று முன்தினம் சுமித்ரா வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணா, இது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார். சுமித்ரா ஓசூர் டவுன் போலீசில் அளித்த புகார் படி, ராமகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை