உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கு

தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணையம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் துர்கா சக்தி தொண்டு நிறுவனம் இணைந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் உள்ள பெண்களுக்கு, தாய்பாலின் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சி நடந்தது. தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மதன் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்து, அரசு மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் உள்ள பெண்களுக்கு பரிசுகளை வழங்கினர்.குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றி, டாக்டர் மாலதி, நர்ஸ் சரிதா, ஆகியோர் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தனர். இதில், தாய்மார்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி