மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
3 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
3 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
3 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
3 hour(s) ago
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலிப்பட்டி பஞ்.,ல் பெரமனுார் கிராமத்திற்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடந்த, 15 நாட்களாக வழங்கவில்லை. இது குறித்து பஞ்., தலைவர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி, நேற்று முன்தினம், காலி குடங்களுடன் திரண்ட அப்பகுதி மக்கள், வேலாவல்லி - மத்துார் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்த செய்தி நேற்று 'காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நேற்று ஆய்வு செய்தனர்.அதில், அருகிலுள்ள, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து நீர் அப்பகுதிக்கு வழங்கப்பட்டதும், சிலர் அதில் நிலத்தடி நீர் தொட்டிக்கும் நீர் எடுப்பதால், குடிநீர் பற்றாக்குறை இருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகிலேயே, புதிய பைப்லைன் அமைத்து, பொது குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காலை, மாலை இருவேளை குடிநீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago