| ADDED : ஜூன் 27, 2024 03:46 AM
கிருஷ்ணகிரி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனைத்திந்திய இளைஞர் மன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம் மற்றும் இ.கம்யூ., கட்சி சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ., நகர செயலாளர் உபேத் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், சி.பி.ஐ., மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, சி.பி.ஐ., அலுவலக செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எனவே, உயிர் பலிக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.