உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கன்டெய்னர் லாரியில் தீ பிளாஸ்டிக் சேர்கள் நாசம்

கன்டெய்னர் லாரியில் தீ பிளாஸ்டிக் சேர்கள் நாசம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு, ஐதராபாதில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து, 31, லாரியை ஓட்டினார். சூளகிரி அருகே சப்படி தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று மதியம், 3:00 மணிக்கு லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அப்போது, லாரி கேபினில் தீப்பிடித்து பரவியது. ஓசூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடியும், 500க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் லாரி, தீயில் கருகி நாசமாயின.சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை